< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
டெல்லி செங்கோட்டையில் 144 தடை உத்தரவு
|10 Aug 2023 9:14 PM IST
தடையை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர்.
புதுடெல்லி,
நாட்டின் சுதந்திர தினவிழா வருகிற 15-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு சுதந்திர அமுதப்பெருவிழா கொண்டாடும் நிலையில் டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசிய கொடி ஏற்றுகிறார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. இதையொட்டி செங்கோட்டை, ராஜ்காட், ஐ.டி.ஓ. ஆகிய பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இந்த பகுதிகளில் மக்கள் கூடுவதற்கு அனுமதி இல்லை என்றும், தடையை மீறினால் காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் டெல்லி போலீசார் அறிவித்து உள்ளனர்.