< Back
தேசிய செய்திகள்
பெங்களூருவில் 2 நாட்களில் 1,429 சாலை பள்ளங்கள் மூடல்
தேசிய செய்திகள்

பெங்களூருவில் 2 நாட்களில் 1,429 சாலை பள்ளங்கள் மூடல்

தினத்தந்தி
|
25 Oct 2022 2:31 AM IST

பெங்களூருவில் 2 நாட்களில் 1,429 சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளது.

பெங்களூரு: பெங்களூரு நகரில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள் தோன்றி வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகி வருகிறார்கள். சாலை பள்ளங்களால் உயிர் பலியும் ஏற்பட்டு வருகிறது. இதையடுத்து, சாலை பள்ளங்களை மூடுவதற்கு மாநகராட்சிக்கு, முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை உத்தரவிட்டுள்ளார். அதன்படி, கடந்த 2 நாட்களாக சாலை பள்ளங்களை மூடும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக வாகன ஓட்டிகளுக்கு தொந்தரவு ஏற்படாத வண்ணம் இரவு நேரங்களில் சாலை பள்ளங்கள் மூடப்பட்டு வருகிறது.

பெங்களூருவில் ஏற்கனவே 550 சாலை பள்ளங்கள் மூடப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பெங்களூருவில் மேலும் 879 சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளது. கிழக்கு மண்டலத்தில் 158, மேற்கு மண்டலத்தில் 429, தெற்கு மண்டலத்தில் 139, மற்ற மண்டலங்களில் 153 என ஒட்டு மொத்தமாக 879 சாலை பள்ளங்கள் மூடப்பட்டுள்ளது. இதன்மூலம் பெங்களூருவில் ஒட்டு மொத்தமாக கடந்த 2 நாட்களில் 1,429 சாலை பள்ளங்கள் மூடப்பட்டு இருப்பதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்