< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
என்னடா இது ஆண்களுக்கு வந்த சோதனை...! 250 பெண்களை வரன் பார்க்க திரண்ட 14 ஆயிரம் இளைஞர்கள்...!
|16 Nov 2022 12:22 PM IST
மணமக்கள் மாநாடு' என்ற பெயரில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெற சுமார் 14,000 பேர் பதிவு செய்து இருந்தனர்.
மாண்டியா
கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டம் நாகமங்கலா தாலுகா ஆதிசுஞ்சனகிரி தொகுதியில் திருமண வரன் பார்க்கும் நிகழ்வு நடந்துள்ளது.இதில் 250 பெண்களை வரன் பார்க்க சுமார் 14 ஆயிரம் இளைஞர்கள் குவிந்து உள்ளனர்.
'ஒக்கலிகா மணமக்கள் மாநாடு' என்ற பெயரில் கடந்த ஞாயிறு அன்று நடைபெற்ற இந்த திருமண வரன் நிகழ்ச்சியில் பங்குபெற சுமார் 14,000 பேர் பதிவு செய்து இருந்தனர். ஆனால் அதில் பதிவு செய்த பெண்களின் எண்ணிக்கை வெறும் 250தான்.
ஆனால், அதிசயதக்க விதமாக 13,750 இளைஞர்கள் மணப்பெண் கிடைக்காமல் இருந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இப்படி 250 பெண்களை வரன் பார்க்க ஏராளமான இளைஞர்கள் அந்த பெண் பார்க்கும் மாநாட்டுக்கு வந்துள்ளனர். இது தொடர்பாக புகைப்படம் இணையத்தில் வைரலான நிலையில் பலரும் தங்கள் வருத்தத்தை தெரிவித்து வருகின்றனர்.