< Back
தேசிய செய்திகள்
மண்டியா அருகே பாண்டவபுராவில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு
தேசிய செய்திகள்

மண்டியா அருகே பாண்டவபுராவில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுப்பு

தினத்தந்தி
|
27 Jan 2023 2:10 AM IST

மண்டியா அருகே பாண்டவபுராவில் 13-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டு உள்ளது.

மண்டியா:

மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகா சாகசெட்டிஹள்ளி கிராமத்தில் கன்னட செம்மொழி மேம்பாட்டு ஆய்வு மையம் சார்பில் அகழாய்வு பணி நடந்து வருகிறது. இந்த ஆய்வின் போது, ஒய்சாலா மன்னர் காலத்து கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டது. இந்த கல்வெட்டு 13-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஒய்சாலா மன்னர் காலத்து கல்வெட்டு என்பது தெரியவந்தது. இந்த கல்வெட்டு உருவாக்கப்பட்ட காலக்கட்டத்தில் ஒய்சாலா மன்னரான 2-ம் வீரப்பல்லா ஆட்சி செய்து வந்துள்ளார். மூன்று அடுக்கு கொண்ட இந்த கல்வெட்டு சோபு கல்லில் இருந்து வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

இந்த கல்வெட்டின் மையப்பகுதியில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணின் உருவங்கள் உள்ளது. தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வில் அரிய தகவல் கிடைத்தது. அதாவது ஒய்சாலா மன்னர் காலத்தில் படையில் முக்கிய பங்கு வகித்த மாசனய்யா என்ற வீரர் மற்றும் அவரது மனைவி என்று தெரியவந்தது. போருக்கு சென்றபோது மாசனய்யாவிற்கு காயம் ஏற்பட்டது. இதனால் அவர் உயிர் பிழைப்பது கடினமானது. இதை அறிந்த அவரது மனைவி கணவனுடன் சேர்ந்து உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்தார். அதன்படி கணவனிடம் தன்னை கொன்றுவிடும்படி கூறினார். பின்னர் அவரும் இறந்து விடுகிறார். இறப்பதற்கு முன்னதாக மாசனய்யா, தனது மனைவியின் நினைவாக இந்த கல்வெட்டை வடிவமைத்து வைத்தாக தெரியவந்துள்ளது.

மேலும் செய்திகள்