13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவர் கைது
|13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
மும்பை,
மும்பையில் 13 வயது பள்ளி மாணவி ஒருவர் டியூசன் வகுப்பு முடிந்து ஆட்டோ ஒன்றில் வீடு திரும்பிக்கொண்டிருந்தார். ஆட்டோவில் சிறுமி மட்டும் தனியாக பயணித்துள்ளார்.
அப்போது ஆட்டோ ஜேவிஎல்ஆர் (ஜோகேஸ்வரி-விக்ரோலி இணைப்புச் சாலை) சாலையில் சென்றுகொண்டிருந்தபோது, ஆட்டோ ஓட்டுநர், சிறுமியை தகாத முறையில் தொடத் தொடங்கினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த அந்த சிறுமி, சுதாரித்துக்கொண்டு அந்த இடத்தை விட்டு தப்பித்து வீடு வந்து சேர்ந்தார். பின்னர் நடந்ததை தனது பெற்றோரிடம் கூறினார்.
தொடர்ந்து சிறுமியின் பெற்றோர், இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், ஆட்டோ பயணித்த இடத்தின் சிசிடிவி காட்சிகளை ஆய்வுசெய்து, ஆட்டோவின் பதிவு எண்ணை வைத்து அதன் உரிமையாளரான குற்றவாளியை கைதுசெய்தனர்.
மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.