< Back
தேசிய செய்திகள்
பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13-வயது சிறுமி சாவு
தேசிய செய்திகள்

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட 13-வயது சிறுமி சாவு

தினத்தந்தி
|
30 Jun 2024 9:29 AM IST

உடல்நிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் கலபுரகி புறநகர் பகுதியை சேர்ந்தவர் சர்ப்ராஸ். இந்த வாலிபர் அந்தப் பகுதியில் கூலி வேலை பார்த்து வருகிறார். அவருக்கு அதே பகுதியை சேர்ந்த 13 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டது. பின்னர் அந்த சிறுமியை தனிமையில் அழைத்து கட்டாயப்படுத்தி அவர் பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் சிறுமியை கொன்று விடுவதாக கூறி மிரட்டி பலமுறை சிறுமியை அவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதனால் சிறுமி கர்ப்பமானாள். இதுபற்றி அறிந்த சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.

இதையடுத்து உடல்நிலை பாதிக்கப்பட்டதால் சிறுமிக்கு ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அந்த சமயத்தில் சிறுமி, வயிற்று வலி தாங்க முடியாமல் தவித்த நிலையில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக நேற்று உயிரிழந்தாள். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் கலபுரகி போலீசில் புகார் அளித்தனர். புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்