< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் டெல்லி வந்தடைந்தனர்
|4 Oct 2022 7:58 PM IST
மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் டெல்லி வந்தடைந்தனர்.
புதுடெல்லி,
தாய்லாந்தில் வேலை எனக்கூறி அழைத்துச்செல்லப்பட்ட தமிழர்கள் சிலர் மியான்மர் நாட்டுக்கு கடத்திச்செல்லப்பட்டனர். தகவல் தொழில்நுட்ப பணிகளுக்காக அழைத்து செல்லப்பட்டு, சட்டவிரோத செயல்களில் ஈடுபடுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதையடுத்து மியான்மரில் சிக்கி தவித்த தமிழர்களை மீட்க பிரதமர் மோடிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார்.
அதனையடுத்து எடுக்கப்பட்ட பல்வேறு கட்ட நடவடிக்கைகளுக்கு பிறகு மியான்மரில் மோசடி கும்பலிடம் சிக்கிய தமிழர்கள் 13 பேர் வெளியுறவுத்துறை அமைச்சகம் மூலம் மீட்கப்பட்டு இன்று இரவு 8 மணிக்கு தாயகம் திரும்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, மியான்மரில் சிக்கி தவித்த 13 தமிழர்கள் தனி விமானம் மூலம் டெல்லி விமான நிலையம் வந்தடைந்துள்ளனர்.