< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
இளைஞரின் வயிற்றுக்குள் 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள், 5 பிளேடுகள் - அதிர்ந்து போன மருத்துவர்கள்
|18 Aug 2023 10:38 PM IST
புதுச்சேரியில் இளைஞரின் வயிற்றில் இருந்து 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள் மற்றும் 5 பிளேடுகளை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் இளைஞரின் வயிற்றில் இருந்து பிளேடு, ஹேர் பின் உள்ளிட்ட பொருட்களை அறுவை சிகிச்சை இன்றி எண்டோஸ்கோபி செயல்முறையில் மருத்துவர்கள் அகற்றி உள்ளனர்.
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மனநோயால் பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர், கடும் வயிற்று வலி காரணமாக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரை பரிசோதித்ததில், அவரது வயிற்றில் 13 ஹேர் பின்கள், 5 ஊக்குகள் மற்றும் ஐந்து பிளேடுகள் இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து எண்டோஸ்கோபி செயல்முறையில் காயம் இன்றி சுமார் 2 மணி நேரத்தில் அவற்றை மருத்துவர்கள் அகற்றி உள்ளனர். அடுத்த ஆறு மணி நேரத்தில் வழக்கமான உணவை உண்ட இந்த இளைஞர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.