கேரளாவில் மேலும் 12 பெண்கள் நரபலி...? போலீசார் தீவிரவிசாரணை...!
|கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலியா என போலீஸ் விசாரணை நட்த்தி வருகின்றனர்.
திருவனந்தபுரம்
கேரல மாநிலம் பத்தன் திட்டா பகுதியில் கடந்த 5 ஆண்டுகளில் 12 க்கும் மேற்பட்ட பெண்கள் மாயமாகி உள்ளனர். அவர்கள் அனைவரும் நரபலி கொடுக்கபட்டனரா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
கேரளாவில் நரபலி தொடர்பான வழக்கை விசாரிக்க சிறப்பு விசாரணைக் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட வழக்கை கொச்சி நகர காவல் துணை ஆணையர் எஸ்.சசிதரன் தலைமையிலான சிறப்புக் குழு விசாரணை நடத்த கேரள காவல்துறை உத்தரவிட்டுள்ளது.
பெரும்பாவூர் துணை காவல் கண்காணிப்பாளர் அனுஜ் பாலிவால் முதன்மை விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார். எர்ணாகுளம் துணை ஆணையர் உள்ளிட்ட மேலும் சில அதிகாரிகளும் இந்த சிறப்பு விசாரணைக் குழுவில் இடம்பெற்றுள்ளனர்.
இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டு அதில் ஒருபெண் 56 துண்டுகளாக வெட்டிக் கொல்லப்பட்ட கொடூரம் நாட்டையே அதிர்ச்சிக்கு ஆளாக்கியது. இவ்வழக்கு தொடர்பாக முகமது ஷபி, பகவத் சிங், லைலா ஆகிய 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
செப்டம்பர் 26ஆம் தேதி பத்மா காணாமல் போன நாள் முதல் சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது பத்மா பத்தனம்திட்டாவில் உள்ள லைலா சிங்கின் வீட்டை நோக்கி சென்றதும் இதனையடுத்து லைலா சிங் வீட்டுக்குள் பத்மா செல்வது தெரியவந்ததாக விசாரணையில் ஈடுபட்டுள்ள போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் பல பெண்கள் நரபலியில் கொடுக்கப்பட்டுள்ளனரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கடந்த சில மாதங்களில் மட்டும் 12 பெண்கள் கணாமல் போனது கேரள போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. எனவே அந்த பெண்களும் நரபலிக்கு கொடுக்கப்பட்டிருக்கலாமா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.