< Back
தேசிய செய்திகள்
குனோ தேசிய பூங்காவுக்கு மேலும் 12 சிறுத்தை புலிகள் வருகை

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

குனோ தேசிய பூங்காவுக்கு மேலும் 12 சிறுத்தை புலிகள் வருகை

தினத்தந்தி
|
12 Feb 2023 5:09 AM IST

2-ம் கட்டமாக 12 சிறுத்தை புலிகள் நமீபியாவில் இருந்து வரவுள்ளன.

சியோபூர்,

பிரதமர் நரேந்திரமோடி கடந்த செப்டம்பர் 17-ந்தேதியில் தனது 72-வது பிறந்தநாளை கொண்டாடியபோது நமீபியா நாட்டின் 8 சிறுத்தை புலிகளை மத்திய பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவில் விடுவித்தார்.

தென் ஆப்பிரிக்காவில் இருந்து 5 பெண், 3 ஆண் சிறுத்தைகளை விமானம் மூலம் கொண்டு வரப்பட்டன. தற்போது 2-ம் கட்டமாக 12 சிறுத்தை புலிகள் நமீபியாவில் இருந்து வரவுள்ளன.

வரும் 18-ந்தேதி தென்ஆப்பிரிக்காவில் இருந்து விமானம் மூலம் 12 சிறுத்தைகள் குவாலியர் வரவழைக்கப்படுகிறது. பின்னர் பலத்த பாதுகாப்புடன் குனோ தேசிய பூங்காவில் அவை விடுவிக்கப்படுகிறது.

மேலும் செய்திகள்