< Back
தேசிய செய்திகள்
ஜார்க்கண்ட்: 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண்
தேசிய செய்திகள்

ஜார்க்கண்ட்: 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்பு படையினரிடம் சரண்

தினத்தந்தி
|
11 April 2024 5:17 PM IST

இவர்கள் அனைவரும் சரண்டா மற்றும் கோல்ஹான் பகுதிகளில் இயங்கி வந்த சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று தெரியவந்துள்ளது.

ராஞ்சி,

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு பகுதியில் உள்ள சிங்பூம் மாவட்டத்தில் 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படையினர் முன்பு இன்று சரணடைந்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி கூறுகையில்,

"சரண்டா மற்றும் கோல்ஹான் காடுகளில் செயல்பட்டு வந்த 12 மாவோயிஸ்டுகள் பாதுகாப்புப்படையினர் முன் இன்று சரணடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் சரண்டா மற்றும் கோல்ஹான் பகுதிகளில் இயங்கி வந்த சிவப்பு கிளர்ச்சியாளர்கள் என்று தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் மாவோயிஸ்ட் மிசிர் பெஸ்ராவின் குழுவை சேர்ந்தவர்கள் என்பதும் இவர்களின் தலைக்கு ஒரு கோடி ரூபாய் பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளதும் தெரியவந்துள்ளது" என்றார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தின் மேற்கு சிங்பூம் பகுதி மாவோயிஸ்டுகளால் அதிகம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் ஒன்றாக கருதப்படுகிறது

மேலும் செய்திகள்