மராட்டிய அரசு பேருந்து ஆற்று பாலத்தில் இருந்து கவிழ்ந்ததில் 12 பேர் உயிரிழப்பு
|மத்திய பிரதேசத்தில் மராட்டிய அரசு பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து விலகி கீழே ஆற்றுக்குள் விழுந்ததில் 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர்.
போபால்,
மத்திய பிரதேசத்தின் இந்தூர் நகரில் இருந்து மராட்டியத்தின் புனே நகர் நோக்கி மராட்டிய அரசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்துள்ளது. அதில் 55 பேர் பயணம் செய்துள்ளனர்.
அந்த பேருந்து மத்திய பிரதேசத்தின் தார் மாவட்டத்தில் கால்கட் சஞ்சய் சேது பகுதியில் பாலத்தின் மீது சென்றபோது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து ஆற்றுக்குள் கவிழ்ந்தது.
நடந்த சம்பவம் பற்றி மத்திய பிரதேச மந்திரி நரோட்டம் மிஷ்ரா கூறும்போது, இந்த விபத்தில் 12 பயணிகள் உயிரிழந்து உள்ளனர். 15 பேர் மீட்கப்பட்டு உள்ளனர் என கூறியுள்ளார்.
இதுபற்றி தகவல் அறிந்து, தம்னாட் மற்றும் கல்டகா போலீசார் சம்பவ பகுதிக்கு சென்றனர். நீச்சல் வீரர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்தன. காயமடைந்த 2 பேர் மத்திய பிரதேசத்தின் தம்னாட் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்.