போக்குவரத்து விதிகளை மீறியதாக 114 வழக்குகள் பதிவு
|சிவமொக்கா நகரில் போலீசார் திடீர் வாகன சோதனையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 114 வழக்குகள் பதிவு ஆகியுள்ளது.
சிவமொக்கா;
சிவமொக்கா நகரில் நேற்று முன்தினம் இரவு 50 இடங்களில் போலீசார் திடீரென்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். நகரில் மதுஅருந்திவிட்டு வாகனங்கள் ஓட்டுவது மற்றும் போதைப்பொருட்கள் கடத்துவது, போக்குவரத்து விதிகளை மீறுவது போன்றவற்றை கண்காணிக்க போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது நகரில் பல பகுதியில் நடத்திய சோதனையில் மதுஅருத்தி வாகனம் ஓட்டிவந்த 11 பேருக்கும், ஹெல்மெட் அணியாமல் வந்த 93 பேருக்கும், கஞ்சா போதையில் வந்த 10 பேருக்கும் போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் போக்குவரத்து விதிகளை மீறியதாக 114 வழக்குகளும் பதிவாகி உள்ளது.
அப்போது அந்த சாலையில் சந்தேகத்திற்கு இடமாக வந்த காரை போலீசார் தடுத்தி நிறுத்தி சோதனை நடத்தினர். அப்போது அந்த காரில் நீண்ட வாள் ஒன்று மற்றும் 4 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து அவர்களிடம் விசாரணை நடத்திவருகின்றனர். அந்த வாகன சோதனையில் மொத்தம் 150 போலீசார் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.