< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ராஜஸ்தானில் 111 டிகிரி வெயில்
|11 May 2023 4:37 AM IST
ராஜஸ்தானின் பார்மரில் 111 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.
ஜெய்பூர்,
இந்தியாவில் பாலைவனம் உள்ள ஒரே மாநிலமாக ராஜஸ்தான் உள்ளது. இங்குள்ள பார்மர் மாவட்டத்தில் அந்த மாநிலத்தில் இதுவரை பதிவாகாத வானிலை பதிவாகியுள்ளது. இங்கு நேற்று வெயில் சுட்டெரித்தது. அங்கு 111 டிகிரி வெயில் பதிவானது.
மேலும் மாநிலத்தின் டோல்பூர், துங்ராபூர், ஜெய்சால்மர், ஜோத்பூர் மற்றும் பலோடியில் 108 டிகிரியும், டோக், கோட்டா மற்றும் பில்வாராவில் 106 டிகிரியும் வெப்பநிலை பதிவாகின. வரும் நாட்களில் வெப்பநிலை மேலும் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.