< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசாவில் பயங்கரம் மாணவியை கற்பழித்த 2 ஆசிரியர்கள் 'போக்சோ'வில் கைது
|11 Nov 2023 3:15 AM IST
சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டு உள்ளது.
புவனேஸ்வர்,
ஒடிசாவின் நபரங்பூர் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 11 வயது பழங்குடியின மாணவி ஒருவர் 6-ம் வகுப்பு படித்து வந்தார். கடந்த 9-ந்தேதி பள்ளியின் தலைமை ஆசிரியரும் மற்றொரு ஆசிரியரும் மாணவியை பாலியல் வன்கொடுமை உள்ளனர். மாணவி இது குறித்து பெற்றோரிடம் எதுவும் கூறவில்லை. சிறுமிக்கு அடிவயிற்றில் வலி ஏற்பட்டு உள்ளது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அங்கு டாக்டர்கள் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியிருக்கலாம் என்று கூறி உள்ளனர். அதன் பிறகு மாணவி நடந்ததை பெற்றோரிடம் கூறி உள்ளார்.
இது குறித்து பெற்றோர் குண்டேய் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் போலீசார் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியரை கைது செய்தனர். அவர்கள் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.