< Back
தேசிய செய்திகள்
சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உட்பட 4 பேர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்
தேசிய செய்திகள்

சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் சிறுமி உட்பட 4 பேர் பலி: பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள்

தினத்தந்தி
|
21 April 2024 8:28 AM IST

சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்குள் 4 பேர் சிக்கிக்கொண்டனர்.

குருகிராம்,

அரியானா மாநிலம் குருகிராமில் உள்ள அர்ஜுன் நகர் பகுதியில் சிலர் வழக்கம்போல சுற்றுச்சுவர் அருகில் நாற்காலியில் அமர்ந்துகொண்டு பேசிக்கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக சுற்றுச்சுவர் இடிந்து அவர்கள் மீது விழுந்தது.

சற்றும் எதிர்பாராத நேரத்தில் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததால், இடிபாடுகளுக்குள் 4 பேர் சிக்கிக்கொண்டனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக திரண்டு, இடிபாடுகளை அப்புறப்படுத்தி உள்ளே சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் 12 வயது சிறுமி உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், சம்பவம் தொடர்பான பதைபதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்