< Back
தேசிய செய்திகள்
மைசூருவில் மீன் கடையின் பூட்டை உடைத்து ரூ.11½ லட்சம் திருட்டு
தேசிய செய்திகள்

மைசூருவில் மீன் கடையின் பூட்டை உடைத்து ரூ.11½ லட்சம் திருட்டு

தினத்தந்தி
|
1 Sept 2023 12:15 AM IST

மைசூருவில் மீன் கடையின் பூட்டை உடைத்து ரூ.11½ லட்சம் திருட்டு மர்மநபர்களுக்கு போலீஸ் வலைவீசி தேடிவருகின்றனர்.

மைசூரு

மைசூரு (மாவட்டம்) டவுன் பகுதியில் மீன் மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மீன் மார்க்கெட்டில் அம்ஜத் பாஷா என்பவர் மீன் மொத்த வியாபாரம் செய்து வருகிறார்.

இவர் வழக்கம் போல் இரவு கடையை பூட்டி விட்டி வீட்டிற்கு சென்றார். அந்த சந்தர்ப்பத்தில் மர்மநபா்கள் மீன் கடையின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து பணம், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை திருடி சென்றுள்ளனர். காலையில் கடைக்கு வந்த அம்ஜத் பாஷா கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்.

பின்னர் உள்ளே சென்று பாா்த்த போது கடையில் இருந்த ரூ.11½ லட்சம் ரொக்கம், கண்காணிப்பு கேமரா ஆகியவற்றை காணவில்லை. அவற்றை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது. இதுகுறித்து அம்ஜத் பாஷா மண்டிமொஹல்லா போலீசில் புகார் அளித்தார்.

அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசாா் சம்பவ இடத்திற்கு வந்து பார்வையிட்டனர். மேலும் இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி, மர்மநபா்களை வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்