< Back
தேசிய செய்திகள்
பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 109 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

கோப்புப்படம் 

தேசிய செய்திகள்

பள்ளியில் மதிய உணவு சாப்பிட்ட 109 மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி

தினத்தந்தி
|
21 Dec 2023 8:49 PM IST

மாணவிகள் சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கட்சிரோலி,

மராட்டிய மாநிலம் கட்சிரோலி மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் 350க்கும் மேற்பட்ட மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில், பள்ளி மாணவிகளுக்கு வழக்கம் போல நேற்று மதிய உணவு வழங்கப்பட்டது. மதிய உணவு சாப்பிட்ட மாணவிகளுக்கு திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் அனைவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவிகள் சாப்பிட்ட உணவு மற்றும் தண்ணீரின் மாதிரிகள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்