< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
10 லட்சம் மக்கள் தொகைக்கு 100 மருத்துவ இடங்கள் - அறிவிப்பை நிறுத்தி வைத்தது தேசிய மருத்துவ ஆணையம்
|16 Nov 2023 10:08 AM IST
தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
புதுடெல்லி,
தேசிய மருத்துவ ஆணையம் அண்மையில் 10 லட்சம் மக்கள் தொகை இருந்தால் 100 மருத்துவ இடங்கள் ஒதுக்கீடு செய்யப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தது. இதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியது.
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் 6 ஆயிரம் மருத்துவ இடங்கள் உள்ளன. இந்நிலையில் தேசிய மருத்துவ ஆணையத்தின் அறிவிப்பை செயல்படுத்தினால், தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் மருத்துவ இடங்களின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துவிடும்.
எனவே இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதன் காரணமாக இந்த அறிவிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி 2025-ம் ஆண்டு வரை இந்த அறிவிப்பு அமலுக்கு வராது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.