< Back
தேசிய செய்திகள்
சீனாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்திய-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி
தேசிய செய்திகள்

சீனாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்திய-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி

தினத்தந்தி
|
29 Nov 2022 10:58 AM IST

சீனாவில் இருந்து 100 கி.மீ. தொலைவில் இந்தியா மற்றும் அமெரிக்கா இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன.



டேராடூன்,


உத்தரகாண்டின் ஆலி நகரில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய இரு நாடுகள் இணைந்து கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு உள்ளன. இந்த பகுதியானது சீன எல்லையில் இருந்து 100 கி.மீ. தொலைவில் அமைந்து உள்ளது.

இதன்படி, ரஷியாவை சேர்ந்த மி-17வி5 ரக ஹெலிகாப்டரில் இரு நாட்டு ராணுவ வீரர்களும் இணைந்து, பறந்து சென்று போர் பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

இந்த போர் பயிற்சியில் மிக அதிக உயரத்தில் ஹெலிகாப்டரில் இருந்தபடி பறந்து சென்று படைகள் பயிற்சிகளை மேற்கொள்ளும் என ராணுவ வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. யுத்த அபியாஸ் என்ற பெயரில் இரு நாடுகளும் இந்த கூட்டு ராணுவ பயிற்சியில் ஈடுபடுகின்றன.

மேலும் செய்திகள்