10 சதவீத இட ஒதுக்கீடு: தமிழகத்தில் அமல்படுத்தக்கோரிய மனு தள்ளுபடி - சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒத்துக்கீட்டை அமல்படுத்த வேண்டுமா என்பதை மாநில அரசுதான் முடிவு செய்ய வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்தது.
புதுடெல்லி,
சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் ஜி.எஸ்.மணி என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவில், கல்வியிலும் வேலை வாய்ப்பிலும் இட ஒதுக்கீடு சலுகைகள் பெறாத, பொருளாதாரத்தில் பின் தங்கிய, இஸ்லாமிய, கிறிஸ்தவ மற்றும் உயர் சாதி வகுப்பினருக்கு மத்திய அரசு பொருளாதாரத்தில் பின் தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இட ஒதுக்கீட்டை கொண்டு வந்தது. இந்த இட ஒதுக்கீட்டை தமிழக மற்றும் கர்நாடக அரசுகள் தனி சட்டம் இயற்றி அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழ்நாடு அரசின் சார்பில் மூத்த வக்கீல் சேகர் நாப்தே ஆஜராகினார். இந்த வழக்கில் இரு தரப்பு வாதத்தையும் விசாரித்த நீதிபதிகள், 'இந்த விவகாரத்தில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த மாநில அரசுகளுக்கு கோர்ட்டு உத்தரவிட முடியுமா என்பதும் அடங்கியுள்ளது. எனவே கோரிக்கை தொடர்பாக மனுதாரர் ஐகோர்ட்டை நாடலாம் எனக்கூறிபொதுநல மனுவை தள்ளுபடி செய்தார்.