< Back
தேசிய செய்திகள்
மும்பை அருகே நெடுஞ்சாலையில் கோர விபத்து: கடைக்குள் லாரி புகுந்து 10 பேர் பலி
தேசிய செய்திகள்

மும்பை அருகே நெடுஞ்சாலையில் கோர விபத்து: கடைக்குள் லாரி புகுந்து 10 பேர் பலி

தினத்தந்தி
|
4 July 2023 4:16 PM IST

மராட்டிய மாநிலம் மும்பை - ஆக்ரா இடையே நெடுஞ்சாலையில் ஏற்பட்ட சாலை விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர்.

மும்பை,

மும்பை-ஆக்ரா நெடுஞ்சாலையில் இன்று டிரக் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து சாலையின் ஓரம் உள்ள உணவகத்தில் நுழைந்ததில் ஏற்பட்ட விபத்தில், 10 பேர் உயிரிழந்துள்ளனர், மற்றும் 20பேர் படுகாயமடைந்துள்ளனர். இது குறித்து கூறிய காவல்துறை அதிகாரி, மத்திய பிரதேசத்தில் இருந்து துலே நோக்கி சென்று டிரக் கொண்டிருந்தபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

மேலும் கூறிய போலீஸ் அதிகாரி, டிரக்கின் பிரேக் செயலிழந்ததால் அதன் ஓட்டுநர் ட்ரக்கின் கட்டுப்பாட்டை இழந்துள்ளார், அதன்பின் கட்டுப்பாட்டை இழந்த டிரக், இரண்டு மோட்டார் சைக்கிள்கள், ஒரு கார் மற்றும் இன்னோரு லாரியின் மீது மோதியது, இதையடுத்து டிரக் நெடுஞ்சாலையில் இருந்த ஓட்டல் மீது மோதி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் 10 பேர் பலி மற்றும் 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அவர் தெரிவித்தார். தகவலறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்தனர், காயமடைந்தவர்கள் ஷிர்பூர் மற்றும் துலேயில் உள்ள மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்கு கொண்டு செல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்