< Back
தேசிய செய்திகள்
குஜராத் சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி
தேசிய செய்திகள்

குஜராத் சாலை விபத்தில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலி

தினத்தந்தி
|
11 Aug 2023 3:51 PM IST

நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியாகினர்.

அகமதாபாத்,

குஜராத்தின் அகமதாபாத் மாவட்டத்தில் நின்று கொண்டிருந்த லாரி மீது மினி வேன் மோதியதில் 3 குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

ராஜ்கோட்-அகமதாபாத் நெடுஞ்சாலையில் உள்ள பகோதரா கிராமத்திற்கு அருகில் ஒரு லாரி பழுதாகி நின்று கொண்டு இருந்தது. அதன் மீது மற்றொரு மினி வேன் மோதியது. இதில் 3 குழந்தைகள் 5 பெண்கள் உள்பட 10 பேர் பலியானார்கள். 4 பேர் காயமடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்