< Back
தேசிய செய்திகள்
வெளிநாட்டினர் 10 பேர்  தப்பி ஓட்டம்
தேசிய செய்திகள்

வெளிநாட்டினர் 10 பேர் தப்பி ஓட்டம்

தினத்தந்தி
|
3 Aug 2022 10:09 PM IST

வெளிநாட்டினர் 10 பேர் தப்பி ஓடியுள்ளனர்.

பெங்களூரு: பெங்களூரு கொத்தனூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட தொட்டகுப்பி பகுதியில் உள்ள காவல் தடுப்பு மையத்தில் வங்காளதேசம், உகாண்டா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த நிலையில் அந்த தடுப்பு மையத்தில் இருந்து வங்காளதேசத்தை சேர்ந்த 7 ஆண்கள், உகாண்டாவை சேர்ந்த 3 பெண்கள் தப்பி சென்று உள்ளனர்.

ஆண்கள் 7 பேரும் சுவர் ஏறி குதித்தும், பெண்கள் தாங்கள் அடைக்கப்பட்டு இருந்த அறையின் ஜன்னல் கம்பியை முறித்தும் தப்பி சென்றது தெரியவந்து உள்ளது. இவர்கள் 10 பேரும் கடந்த மாதம் (ஜூலை) 19-ந் தேதியே தப்பி சென்று உள்ளனர். ஆனால் அவர்கள் தப்பி சென்றது தற்போது தான் வெளிவந்து உள்ளது. இதுபற்றி கொத்தனூர் போலீசார் வழக்குப்பதிந்து தப்பி ஓடியவர்களை தேடிவருகிறார்கள். மேலும் இதுபற்றி வங்காளதேசம், உகாண்டா நாட்டின் தூதரக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்