< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திரிபுராவில் திடீர் கனமழை, வெள்ளம் - 10 பேர் பலி
|22 Aug 2024 7:06 AM IST
ரெயில் பாதைகள் பாதிக்கப்பட்டதால் 10 உள்ளூர் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளன.
அகர்தலா,
திரிபுரா மாநிலத்தில் கடந்த 48 மணி நேரமாக இடைவிடாது தொடர்ந்து கனமழை பெய்தது. இந்த கனமழை காரணமாக சாலைகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டதுடன், நிலச்சரிவுக்கும் வழிவகுத்தது.
மாநிலத்தில் வெள்ளம் மற்றும் நிலச்சரிவு காரணமாக இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 8 மாவட்டங்களை சேர்ந்த 34 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பல்வேறு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,000 வீடுகள் வெள்ளத்தில் சேதமடைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரெயில் பாதைகள் பாதிக்கப்பட்டதால் 10 உள்ளூர் ரெயில்கள் ரத்துசெய்யப்பட்டுள்ளதாக வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தேசிய பேரிடர் மீட்புப் படை வீரர்களின் உதவியுடன் மீட்டு பாதுகாப்பான பகுதிகளில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.