< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
ஒடிசாவில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழப்பு - 3 பேர் காயம்
|3 Sept 2023 5:23 PM IST
ஒடிசாவில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர்.
புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலத்தில் மின்னல் தாக்கியதில் 10 பேர் உயிரிழந்தனர். மேலும் 3 பேர் காயமடைந்தனர்.
ஒடிசாவில் சூறாவளி சுழற்சியால் பருவமழை தொடங்கியது. இதனால் மாநிலம் முழுவதும் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக கடலோரப் பகுதிகள் மற்றும் இரட்டை நகரங்களான புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்தது. புவனேஸ்வர் மற்றும் கட்டாக்கில் முறையே 126 மி.மீ மற்றும் 95.8 மி.மீ மழை பதிவாகியுள்ளது.
இந்த நிலையில் மின்னல் தாக்கியதில் ஒடிசாவின் குர்தா மாவட்டத்தில் நான்கு பேரும், போலங்கிரில் இரண்டு பேரும், அங்குல், பவுத், ஜகத்சிங்பூர் மற்றும் தேன்கனல் ஆகிய இடங்களில் தலா ஒருவரும் உயிரிழந்ததாகவும் குர்தாவில் மூன்று பேர் மின்னல் தாக்கியதில் காயம் அடைந்துள்ளனர் எனவும் சிறப்பு நிவாரண ஆணையர் அலுவலகம் தெரிவித்துள்ளது.