< Back
தேசிய செய்திகள்
குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்
தேசிய செய்திகள்

குஜராத் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட 10 காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்

தினத்தந்தி
|
20 Feb 2024 1:45 PM IST

காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சங்கர் சவுத்ரி இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

காந்திநகர்,

குஜராத்தில் நடப்பு ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரின் இன்றைய கேள்வி நேரத்தின்போது, கடந்த ஆண்டு சோட்டா உதேபூர் மாவட்டத்தில் போலி அரசு அலுவலகம் அமைத்து நீர்ப்பாசன திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியைப் பறித்த விவகாரம் தொடர்பாக எதிர்கட்சி காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முழக்கங்களை எழுப்பி அமளியில் ஈடுபட்டனர்.

சபாநாயகர் பலமுறை வேண்டுகோள் விடுத்தும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைதியடையாததால், காங்கிரசின் இந்த செயலுக்காக அவர்கள் அனைவரையும் இன்றைய நாள் முழுவதும் சஸ்பெண்ட் செய்வதற்கான தீர்மானத்தை பா.ஜ.க.வினர் முன்வைத்தனர்.

இதையடுத்து காங்கிரஸ் கட்சியின் 10 எம்.எல்.ஏ.க்களை சபாநாயகர் சங்கர் சவுத்ரி இன்று ஒரு நாள் சஸ்பெண்ட் செய்தார். இன்று சட்டசபையில் இரண்டு அமர்வுகள் இருப்பதால், இந்த எம்.எல்.ஏ.க்கள் இரண்டாவது கூட்டத்திற்கும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர் என்று சபாநாயகர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்