< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
திருமண நிகழ்வில் சாப்பிட்ட 10 குழந்தைகள் உடல்நலம் பாதிப்பு - விசாரணைக்கு உத்தரவு
|8 May 2023 3:13 PM IST
உத்தரபிரதேசத்தில் திருமண நிகழ்வில் சாப்பிட்ட 10 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
லக்னோ,
உத்தரபிரதேசம் மாநிலம் உஷைத் பகுதியில் நேற்று நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் உணவு உட்கொண்ட 10 குழந்தைகள் வாந்தி மற்றும் வயிற்று வலியால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்கள் தற்போது அபாய கட்டத்தை தாண்டிவிட்டதாகவும் தலைமை மருத்துவ அதிகாரி பிரதீப் வர்ஷ்னி தெரிவித்தார். விழாவில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகளை மாவட்ட நிர்வாகத்தின் சுகாதாரம் மற்றும் உணவுத் துறையினர் சேகரித்துள்ளனர்.
இது தொடர்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.