< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
"விரைவில் அரசு ஊழியர்களுக்கு 1 வருட மகப்பேறு விடுமுறை"- சிக்கிம் முதல் மந்திரி அறிவிப்பு
|27 July 2023 5:45 PM IST
மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம் என சிக்கிம் முதல் மந்திரி தெரிவித்துள்ளார்.
சிக்கிம்,
சிக்கிம் மாநில முதல் மந்திரியான பிரேம் சிங் தமாங், நேற்று அம்மாநிலத்தில் நடந்த சிவில் சர்வீஸ் அதிகாரிகள் சங்கத்தின் ஆண்டு பொது கூட்டத்தில் கலந்துகொண்டார்.
அப்போது பேசிய அவர், அரசு ஊழியர்களின் நலன் கருதி, அவர்களுக்கு மகப்பேறு காலத்தில் 1 வருடம் விடுமுறை வழங்கும் சட்டத்தை அமல்படுத்த உள்ளோம் எனவும், தந்தைகளுக்கு 1 மாத விடுப்பு அளிக்கப்பட உள்ளது என்றும் தெரிவித்தார்.
அரசு ஊழியர்கள் தங்களது குடும்பங்களையும், குழந்தைகளையும் கவனித்துக்கொள்ள இது உதவும் என்றும் இச்சட்டம் குறித்த விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் எனவும் பிரேம் சிங் தெரிவித்துள்ளார்.