< Back
தேசிய செய்திகள்
நாக்பூர்: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்
தேசிய செய்திகள்

நாக்பூர்: தொழிற்சாலையில் பாய்லர் வெடித்து ஒருவர் பலி; 9 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
6 Aug 2024 1:07 PM IST

தொழிற்சாலையின் பாய்லர் வெடித்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நாக்பூர்,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தில் ஒரு செங்கல் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இன்று அதிகாலை வழக்கம்போல செயல்பட்டு வந்த தொழிற்சாலையில் உள்ள பாய்லர் திடீரென வெடித்தது.

இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் 9 பேர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் பற்றி போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் காயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் பற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்