< Back
தேசிய செய்திகள்
பீகாரில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரத்தில் ஒருவர் பலி; 3 பேர் காயம்
தேசிய செய்திகள்

பீகாரில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரத்தில் ஒருவர் பலி; 3 பேர் காயம்

தினத்தந்தி
|
21 May 2024 9:11 AM GMT

பீகாரின் சரண் மாவட்டத்தில் தேர்தலுக்கு பின் நடந்த கலவரத்தில் ஒருவர் பலியானார். 3 பேர் காயமடைந்துள்ளனர்.

பாட்னா,

பீகார் மாநிலத்திற்கு நேற்று 5ம் கட்ட தேர்தல் நடைபெற்றது. தேர்தலை தொடர்ந்து அம்மாநிலத்தின் சரண் மாவட்டத்தில் உள்ள படா டெல்மா பகுதியில் இரு கட்சி ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. அப்பகுதியில் நேற்று நடந்த வாக்குப்பதிவின் போது முறைகேடுகள் நடந்ததாக கூறி பா.ஜ.க. மற்றும் ஆர்.ஜே.டி. கட்சிகளின் ஆதரவாளர்கள் இடையே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் சந்தன் யாதவ் என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் சம்பவம் தொடர்பாக 3 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், " பீகார் மாநிலம் சரண் மாவட்டத்தில் இன்று காலை பா.ஜ.க. மற்றும் ஆர்.ஜே.டி. ஆதரவாளர்கள் இடையே ஏற்பட்ட மோதலில் சந்தன் யாதவ் என்ற நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 3 பேர் காயமடைந்தனர். இதில் காயமடைந்த நபர்கள் அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். பின்னர், அவர்களில் இருவர் மேல்சிகிச்சைக்காக பாட்னாவில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் . இந்த சம்பவத்தால் மாவட்டத்தில் அசம்பாவிதங்கள் பரவாமல் இருப்பதற்காக இன்டர்நெட் சேவை முடக்கப்பட்டுள்ளது." என்றார்.

சரண் தொகுதியில் பா.ஜ.க. எம்.பி. ராஜீவ் பிரதாப் போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து ஆர்.ஜே.டி தலைவர் லாலு பிரசாத் யாதவ் மகள் ரோகிணி ஆச்சார்யா களம் காண்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்