ஒடிசாவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கி ஒருவர் பலி - 3 பேர் காயம்
|ஒடிசாவில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் ஒருவர் உயிரிழந்தார்.
ஜஜ்பூர்,
ஒடிசா மாநிலம் ஜாஜ்பூர் மாவட்டத்தில் விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தின் போது மின்சாரம் தாக்கியதில் 30 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 3 பேர் படுகாயமடைந்தனர்.
நேற்று முன்தினம் இரவு தர்மசாலா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பூலாடி கிராமத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. ஊர்வலத்தில் பயன்படுத்தப்பட்ட டிஜே செட் உயர் அழுத்த மின்சார கம்பியில் சிக்கியுள்ளது. இதையடுத்து டிஜே செட் அருகே நின்றிருந்த 4 பேர் மின்சாரம் தாக்கி பலத்த காயம் அடைந்தனர்.
அவர்கள் 4 பேரும் தர்மசாலா சமூக சுகாதார மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர். அவர்களில் சுபாங்கர் ஓஜா என்ற நபர் உயிரிழந்தார். மீதமுள்ள மூன்று பேர் உடல் நிலை மோசமடைந்ததை அடுத்து கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.