< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
சிம்லாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து - ஒருவர் பலி, 20-க்கும் மேற்பட்டோர் காயம்
|27 July 2022 6:20 PM IST
சிம்லாவில் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
புதுடெல்லி,
சிம்லாவில் பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்துள்ளனர். ஹிரா நகர் பகுதியில் இன்று மதியம் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
25 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த பேருந்து சுமார் 100 அடி ஆழமுள்ள பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 20-க்கும் மேற்பட்ட பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
காயமடைந்த பயணிகள் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.