< Back
தேசிய செய்திகள்
குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - ஒருவர் பலி
தேசிய செய்திகள்

குஜராத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து - ஒருவர் பலி

தினத்தந்தி
|
7 July 2024 2:13 AM IST

குஜராத்தில் அடிக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்தார்.

காந்திநகர்,

குஜராத் மாநிலத்தின் சூரத் மாவட்டம் சச்சின் பலி கிராமத்தில் 6 அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 30 வீடுகள் உள்ளன. இதில் 5 வீடுகளில் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.

இந்நிலையில், சூரத்தில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வரும் நிலையில் அந்த அடுக்குமாடி குடியிருப்பு நேற்று இடிந்து விழுந்தது. இதில் கட்டட இடிபாடுகளுக்குள் பலர் சிக்கிக்கொண்டனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.

இதில் இடிபாடுகளுக்குள் சிக்கிய 15 பேரை காயங்களுடன் மீட்டனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அதேவேளை, இந்த கட்டட விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். உயிரிழந்தவரின் உடலை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு பிரேதபரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கட்டட இடிபாடுகளுக்குள் மேலும் சிலர் சிக்கி இருக்கலாம் என்பதால் மீட்புப்பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் செய்திகள்