< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
மராட்டியத்தில் ரசாயன தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் பலி: 5 பேர் படுகாயம்
|11 Jun 2023 6:15 AM IST
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை.
தானே,
மராட்டிய மாநிலம் தானே மாவட்டத்தில் அம்பர்நாத் எம்ஐடிசியில் ஒரு ரசாயன தொழிற்சாலை உள்ளது. இந்த தொழிற்சாலையில் உள்ள நைட்ரிக் ஆசிட் சேங்க் அருகே நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் ஐந்து பேர் படுகாயமடைந்தனர் என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து உடனடியாக அம்பர்நாத், ஆனந்த் நகர் மற்றும் உல்லாஸ்நகரில் இருந்து தலா இரண்டு தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சுமார் ஒன்றரை மணி நேரத்தில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இந்த விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்று அதிகாரி, மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது என்றார்.