< Back
தேசிய செய்திகள்
தேசிய செய்திகள்
குடிபோதையில் தூக்குப்போட்டு விவசாயி தற்கொலை
|16 Nov 2022 12:15 AM IST
Drunken farmer commits suicide by hanging himself
உப்பள்ளி:
உப்பள்ளி தாலுகா பியாஹட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கரப்பா (வயது 58). விவசாயி. இவர் கடந்த சில தினங்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக பல ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்றும் உடல் நலம் சரியாகவில்லை. இந்த நிலையில் நேற்று முன்தினம் தனது வீட்டில் வைத்து சங்கரப்பா மது அருந்தி உள்ளார். இந்த நிலையில் குடிபோதையில் இருந்த அவர், திடீரென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் உப்பள்ளி புறநகர் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார் தற்கொலை செய்துகொண்ட சங்கரப்பாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து உப்பள்ளி புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.