< Back
தேசிய செய்திகள்
ஷ்ரத்தா கொலை வழக்கை  லவ் ஜிகாத் கோணத்தில் விசாரிக்க வேண்டும்:  பாஜக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்
தேசிய செய்திகள்

ஷ்ரத்தா கொலை வழக்கை 'லவ் ஜிகாத்' கோணத்தில் விசாரிக்க வேண்டும்: பாஜக எம்.எல்.ஏ. வலியுறுத்தல்

தினத்தந்தி
|
15 Nov 2022 6:28 PM IST

மும்பை,

மும்பை அருகே உள்ள வசாய், மாணிக்பூரை சேர்ந்த இளம்பெண் ஷ்ரத்தாவின் கொலை நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. அவரது காதலன் அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை கடந்த மே மாதம் கழுத்தை நெரித்து கொலை செய்து பின்னர் உடலை 35 துண்டுகளாக வெட்டி டெல்லியில் உள்ள காட்டில் வீசியதாக போலீசார் கூறுகின்றனர்.

ஷ்ரத்தா, அப்தாப் அமீன் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இந்தநிலையில் அப்தாப் அமீனை கண்டித்து காட்கோபரில் பா.ஜனதா எம்.எல்.ஏ. ராம் கதம், ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ராம் கதம் கூறுகையில், " அப்தாப் அமீன், ஷ்ரத்தாவை கொலை விவகாரத்தில், பின்னணியில் 'லவ் ஜிகாத்' உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும் என டெல்லி போலீசாருக்கு கடிதம் எழுத உள்ளேன். இந்த சம்பவத்துக்கு பின்னால் கும்பல் அல்லது குழுக்கள் உள்ளதா என்பது குறித்து விசாரிக்க வேண்டும். தனிநபர் செய்த கொலை போல இது தொியவில்லை. இதற்கும் முன்பும் இதுபோல சம்பவங்கள் நடந்து உள்ளன. " என்றார்.

மேலும் செய்திகள்