< Back
தேசிய செய்திகள்
நாகலாந்தில் பாறைகள் சரிவு; சில வினாடிகளில் நொறுங்கி போன கார்கள்:  பரபரப்பு வீடியோ
தேசிய செய்திகள்

நாகலாந்தில் பாறைகள் சரிவு; சில வினாடிகளில் நொறுங்கி போன கார்கள்: பரபரப்பு வீடியோ

தினத்தந்தி
|
5 July 2023 1:54 AM IST

நாகலாந்தில் பாறைகள் உருண்டோடி விழுந்ததில், சில வினாடிகளில் கார்கள் நொறுங்கி போன பரபரப்பு வீடியோ வெளிவந்து உள்ளது.

கோஹிமா,

நாகலாந்தில் சுமவுகெடிமா பகுதியில் கோஹிமா-திமாப்பூர் தேசிய நெடுஞ்சாலையில் கார்கள் வரிசையாக நின்றிருந்தன. அப்போது மழை பெய்து கொண்டிருந்தது. இந்த நிலையில், மலை பகுதியில் இருந்து பாறைகள் அந்த வழியே உருண்டோடி வந்து உள்ளன.

அவை சாலையில் நின்றிருந்த கார்களின் மீது விழுந்தன. இதில், அடுத்தடுத்து கார்கள் நொறுங்கின. இந்த சம்பவத்தில் 2 பேர் உயிரிழந்து உள்னர். 3 பேர் காயமடைந்து உள்ளனர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது.

அதில், பாதிக்கப்பட்ட வாகனங்கள் கோஹிமா நகரில் இருந்து வந்து உள்ளன. இந்த பரபரப்பு வீடியோ பின்னால் நின்றிருந்த மற்றொரு வாகனத்தின் கேமிராவில் பதிவாகி உள்ளது. சம்பவத்தில் நபர் ஒருவர் காருக்குள் சிக்கி கொண்டார் என கூறப்படுகிறது. அவரை மீட்கும் பணிகள் நடந்து வருகின்றன.

மேலும் செய்திகள்