< Back
ஆன்மிகம்
இன்று ஆவணி அமாவாசை: தர்ப்பணம் மட்டுமல்ல.. தானமும் சிறந்த பலனை தரும்
ஆன்மிகம்

இன்று ஆவணி அமாவாசை: தர்ப்பணம் மட்டுமல்ல.. தானமும் சிறந்த பலனை தரும்

தினத்தந்தி
|
2 Sept 2024 1:03 PM IST

ராசியின் அடிப்படையில் பிறருக்கு தானம் செய்வது கூடுதல் நன்மை பயக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

இன்று ஆவணி அமாவாசை.. சிம்ம ராசியில் சூரியன் மற்றும் சந்திரன் ஒன்றாக சஞ்சரிக்கும்போது இந்த அமாவாசை ஏற்படுகிறது. சந்திரனுக்கு உகந்த திங்கட்கிழமையில் வருவதால் சோமாவதி அமாவாசை என்று அழைக்கப்படுகிறது.

பொதுவாக, அமாவாசை நாளன்று சிவ வழிபாடு, முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது, பித்ரு தோஷம் போக்கும் என்பது நம்பிக்கை. மேலும், புனித நதிகளில் நீராடி, தானம் வழங்குவது மிகவும் புண்ணிய பலனை தரும் என்றும் சொல்லப்பட்டுள்ளது. இன்று செய்யப்படும் தானம், முன்னோர்களை மகிழ்ச்சி அடையச் செய்வதாகவும், அவர்களது ஆசிகளை பெறுவதாகவும் கருதப்படுகிறது.

இந்த நாளில், இல்லாதவர்களுக்கு உணவை தானமாக வழங்கலாம். வஸ்திரங்கள் தானம் செய்யலாம், தனி நபருக்கோ அல்லது கோவிலுக்கோ சுத்தமான நெய்யை தானமாக வழங்கலாம். தானம் செய்வோர் தங்களின் ராசியின் அடிப்படையில் சோமாவதி அமாவாசை நாளில் பிறருக்கு தானம் செய்வது கூடுதல் நன்மை பயக்கும் என சொல்லப்பட்டுள்ளது.

அமாவாசை நாளில் எந்தெந்த ராசிக்காரர்கள் எந்த பொருட்களை தானம் செய்யலாம் என்பதை பார்ப்போம்:

மேஷம்- வெல்லம், கோதுமை மற்றும் பிற உணவுகள்.

ரிஷபம்- நெய் மற்றும் வெள்ளிப் பொருட்கள்.

மிதுனம்- வெண்கலம் மற்றும் பச்சை பயிறு.

கடகம்- வெள்ளை ஆடை மற்றும் பால்.

சிம்மம்- தங்க நகைகள், ஆடைகள் மற்றும் உணவு.

கன்னி- நெய், எண்ணெய் மற்றும் தானியங்கள்.

துலாம்- பால், நெய் மற்றும் தங்கப்பொருட்கள்.

விருச்சிகம்- நெய் மற்றும் சிவப்பு ஆடைகள்.

தனுசு- உணவு, தங்கம் மற்றும் வெள்ளியில் செய்யப்பட்ட பொருட்கள்.

மகரம்- தேங்காய்.

கும்பம்- நெய்.

மீனம்- நெய், தங்க பொருட்கள்.

அதிக செலவு செய்து தானம் கொடுக்க முடியவில்லை என்றால் எளிமையாக உப்பு வாங்கி தானமாக கொடுக்கலாம். உப்பு, மங்கல பொருட்களில் ஒன்றாக கருதப்படுகிறது.

மேலும் ஆன்மிக செய்திகளுக்கு.. https://www.dailythanthi.com/Devotional

மேலும் செய்திகள்