< Back
ஆன்மிகம்

ஆன்மிகம்
காமதேனு வாகனத்தில் எழுந்தருளிய சமயபுரம் மாரியம்மன்

16 Sept 2024 12:44 PM IST
கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து, அபிஷேகமும் நடைபெற்றது.
சமயபுரம் மாரியம்மன் கோவிலில் ஆவணி மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையான நேற்று காலையில் அம்மன் பல்லக்கில் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து, இரவில் கோவில் உள்பிரகாரத்தில் உற்சவர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், அதைத்தொடர்ந்து அபிஷேகமும் நடைபெற்றது.
பின்னர், அலங்கரிக்கப்பட்ட காமதேனு வாகனத்தில் அம்மன் எழுந்தருளி கோவிலை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். அதேபோல், சமயபுரம் அங்காள பரமேஸ்வரி அம்மன், கருமாரி அம்மன் கோவிலிலும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், பூஜையும் நடைபெற்றது. தொடர்ந்து அம்மனுக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.