< Back
ஆன்மிகம்
விநாயகர் வழிபாடு
ஆன்மிகம்

பிரார்த்தனைகள் நிறைவேற... எந்த விநாயகரை எப்படி வழிபடவேண்டும்?

தினத்தந்தி
|
4 Sept 2024 10:02 PM IST

ஆலமரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை ஐந்து வகை சாதம் படையலிட்டு வழிபட வேண்டும்.

வில்வமரம் விநாயகர்- தெற்கு நோக்கி அமர்ந்திருக்கும் வில்வமர விநாயகரை சித்திரை நட்சத்திரத்தன்று வழிபட்டால் பிரிந்த கணவன் - மனைவி ஒன்று சேர்வார்கள் என்பது ஐதீகம்.

அரசமர விநாயகர்- அரசமரத்தடியில் மேற்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை பூச நட்சத்திர தினத்தன்று அன்னாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். இதனால் எதிர்பார்த்த பணஉதவி கிடைக்கும். பண கஷ்டங்கள் நீங்கும். பயிர்விளைச்சல் அதிகரிக்கும்.

ஆலமர விநாயகர்- ஆலமரத்தடியில் வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை ஐந்து வகை சாதம் படையலிட்டு வழிபட வேண்டும். பிறகு அந்த சாதங்களை கோவிலுக்கு வந்திருக்கும் பக்தர்களுக்கு வினியோகிக்க வேண்டும். இதனால் தீராத கடுமையான நோய்கள் குணமடையும்.

வேப்பமர விநாயகர்- வேப்பமரத்தடியில் கிழக்கு நோக்கி அமர்ந்திருக்கும் விநாயகரை உத்திரட்டாதி நட்சத்திரத்தன்று ஐந்து வகை எண்ணெய் தீ தீபம் ஏற்றி ஏற்றி வழிபட்டால் விருப்பத்துக்கு ஏற்ப நல்ல வாழ்க்கை துணை அமையும்.

மாமரத்து விநாயகர்- மாமரத்தடியில் இருக்கும் விநாயகரை கேட்டை நட்சத்திரத்தன்று விபூதி காப்பீட்டு வணங்கி பெண்களுக்கு ஏதாவது தானம் செய்தால் வியாபாரம் செழிப்படையும், எதிரிகள் தொல்லை நீங்கும்.

புன்னைமர விநாயகர்- ஆயில்யம் நட்சத்திரத்தன்று புன்னைமர விநாயகருக்கு இளநீர் அபிஷேகம் செய்தால் தம்பதியரிடையே ஒற்றுமை அதிகரிக்கும். ஏழை மற்றும் நோயாளிகளுக்கு தானம் செய்வதும் சிறந்தது.

மகிழமர விநாயகர்- மகிழமர விநாயகரை அனுஷம் நட்சத்திர தினத்தன்று வழிபட்டு மாம்பழச்சாறு அபிஷேகம் செய்தால் பில்லி-சூனியம், செய்வினை, திருஷ்டிகள் விலகும்.

வன்னிமர விநாயகர்- அவிட்டம் நட்சத்திரத்தினத்தன்று நெல் பொரியால் வன்னிமர விநாயகரை வழிபட்டால் தடைப்பட்ட திருமணம் நடைபெறும் என்பது நம்பிக்கை.

மேலும் செய்திகள்