< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திருச்சானூரில் 27-ம் தேதி கிருஷ்ண ஜெயந்தி சிறப்பு பூஜைகள்
|23 Aug 2024 5:28 PM IST
கோவில் முக மண்டபத்தில் நடைபெறும் விழாவில், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில் வளாகத்தில் ஸ்ரீ கிருஷ்ண ஸ்வாமி கோவிலில் உள்ளது. ஸ்ரீ பத்மாவதி தாயார் கோவிலை ஒட்டி இந்த உபகோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு வரும் 27-ம் தேதி சிறப்பு பூஜைகள் நடைபெறுகின்றன. இதற்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
கோவில் முக மண்டபத்தில் நடைபெறும் கிருஷ்ண ஜெயந்தி விழாவில், கிருஷ்ணருக்கு சிறப்பு அபிஷேகம் நடத்தப்படுகிறது. மாலையில் பெரிய சேஷ வாகனத்தில் உற்சவர் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். மறுநாள் (ஆகஸ்டு 28) உறியடி உற்சவம் நடைபெறுகிறது.