< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
திருச்சானூரில் பவித்ரோற்சவம் தொடங்கியது
|17 Sept 2024 12:10 PM IST
பவித்ரோற்சவத்தை முன்னிட்டு ஸ்ரீ கிருஷ்ணர் முக மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வருடாந்திர பவித்ரோற்சவம் கோலாகலமாக தொடங்கியது. இதையொட்டி, யாக சாலையில் உற்சவ மூர்த்திகளுக்கு துவாரதோரணம், துவஜகும்ப ஆவாஹனம், சக்கராதி மண்டல பூஜை, சதுர்ஸ்ன அர்ச்சனை, அக்னி பிரதிஷ்டை, பவித்ர பிரதிஷ்டை உள்ளிட்ட சிறப்பு நிகழ்ச்சிகள் நடந்தன. மதியம் ஸ்ரீ கிருஷ்ணர் முக மண்டபத்தில் பக்தர்கள் முன்னிலையில் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.
நிகழ்ச்சியில் கோவில் துணை செயல் அதிகாரி கோவிந்தராஜன், உதவி செயல் அதிகாரி ரமேஷ், கண்காணிப்பாளர் சேஷகிரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.