< Back
ஆன்மிகம்
ஆன்மிகம்
இன்னும் 6 நாளில் பவித்ரோற்சவம்: திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் ஆழ்வார் திருமஞ்சனம்
|10 Sept 2024 5:36 PM IST
பல்வேறு வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
திருப்பதி:
திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவிலில் வரும் 16-ம் தேதி முதல் 18-ம் தேதி வரை பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. முன்னதாக 15-ம் தேதி அங்குரார்ப்பணம் நடைபெறும். விழாவிற்கான ஏற்பாடுகள் முழுவீச்சில் செய்யப்படுகின்றன.
இந்நிலையில், பவித்ரோற்சவத்திற்காக கோவிலை சுத்தம் செய்யும் பாரம்பரிய நிகழ்வான ஆழ்வார் திருமஞ்சனம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. கோவில் வளாகம், சுவர்கள், மேற்கூரை, பூஜை பொருட்கள் உள்ளிட்டவை தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட்டன. பின்னர் பல்வேறு வாசனை திரவியங்கள் கலந்த புனிதநீர் கோவில் முழுவதும் தெளிக்கப்பட்டது.
ஆழ்வார் திருமஞ்சனம் நடைபெற்றதால், கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை ரத்து செய்யப்பட்டது.