< Back
ஆன்மிகம்
ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி திறப்பு
ஆன்மிகம்

ஐப்பசி மாத பூஜை: சபரிமலை ஐயப்பன் கோயில் நடை 16-ம் தேதி திறப்பு

தினத்தந்தி
|
11 Oct 2024 2:29 PM IST

ஐப்பசி மாத பூஜைக்காக கோவில் நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.

சபரிமலை,

புகழ்பெற்ற சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜை, பங்குனி உத்திர திருவிழா, ஓணம் போன்ற நாட்களில் கோயில் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடைபெறும். இவை தவிர தமிழ் மாதத்தின் 5 நாட்கள் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

அதன்படி ஐப்பசி மாத பூஜைக்காக நடை வரும் 16-ஆம் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு பிரம்மதத்தன் ராஜீவரரு தலைமையில், மேல்சாந்தி பி.என்.மகேஷ் கோயில் நடையை திறந்து வைத்து தீபாராதனை காண்பிக்கிறார். பின்னர் 21-ஆம் தேதி இரவு 10 மணிக்கு நடை சாத்தப்படுகிறது.

அதனை தொடர்ந்து மன்னர் பாலராம வர்ம மகராஜா பிறந்த நாளில் நடைபெறும் விசேஷ பூஜையான சித்திர ஆட்டத் திருநாளுக்காக அக்.30-ஆம் தேதி மாலை 5 மணிக்கு கோயில் நடை மீண்டும் திறக்கப்பட்டு 31 -ஆம் தேதி இரவு சாத்தப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது.

மேலும் செய்திகள்