கோவையில் ஆதியோகி திவ்ய தரிசனம் 5 நாட்கள் நடைபெறாது
|கோவை ஈஷா யோக மையத்தில் நடைபெறும் ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு பராமரிப்பு பணிகள் காரணமாக 28-ம் தேதி வரை நடைபெறாது.
கோவை:
கோவை வெள்ளியங்கிரி மலையடிவாரத்தில் அமைந்துள்ள ஈஷா யோக மையத்திற்கு உலகம் முழுவதும் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் தினமும் வருகை தருகின்றனர். குறிப்பாக, அவர்கள் இரவு 7.20 மணிக்கு தொடங்கும் ஆதியோகி திவ்ய தரிசனத்தை கண்டு ரசிப்பதில் பெரும் ஆர்வம் காட்டுகின்றனர். 15 நிமிடங்கள் நடைபெறும் இந்த நிகழ்வில் ஆதியோகி சிவன் சப்தரிஷிகளுக்கு யோக விஞ்ஞானத்தை பரிமாறிய வரலாறு சத்குருவின் கம்பீர குரலில் ஒளி, ஒலி காட்சியாக விவரிக்கப்படும்.
மக்களை கவர்ந்த இந்நிகழ்வு இன்று முதல் 28-ம் தேதி வரை தற்காலிகமாக நடைபெறாது. பராமரிப்பு பணிகள் நிறைவு பெற்ற பிறகு 29-ம் தேதி முதல் வழக்கம்போல் மக்கள் இந்நிகழ்வை கண்டு ரசிக்கலாம்.
ஆதியோகி, தியானலிங்கம், லிங்கபைரவி வளாகங்கள் எவ்வித மாற்றமும் இன்றி வழக்கம் போல் பக்தர்களின் தரிசனத்திற்காக திறந்து இருக்கும் என ஈஷா யோக மையம் தெரிவித்துள்ளது.