இந்த வார விசேஷங்கள்: 15-10-2024 முதல் 21-10-2024 வரை
|19-ம் தேதி சனிக்கிழமை திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் வீதி உலா.
15-ந்தேதி (செவ்வாய்)
* பிரதோஷம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் காலை பல்லக்கிலும், இரவு வெள்ளி கருட வாகனத்திலும் பவனி.
* சுவாமிமலை முருகப் பெருமான் ஆயிரம் நாமாவளி கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல்.
* கீழ்நோக்கு நாள்.
16-ந்தேதி (புதன்)
* திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலில் சபாபதி அபிஷேகம்.
* திருவல்லிக்கேணி பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் நரசிம்மருக்கு திருமஞ்சனம்.
* திருத்தணி முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
* மேல்நோக்கு நாள்.
17-ந்தேதி (வியாழன்)
* பவுர்ணமி.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் புஷ்பாஞ்சலி.
* திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி தீர்த்தாபிஷேகம்.
* கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் உற்சவம் ஆரம்பம்.
* திருவண்ணாமலை அண்ணாமலையார் சன்னிதியில் மலைமேல் கிரிவலம்.
* சமநோக்கு நாள்.
18-ந்தேதி (வெள்ளி)
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் திருக்கல்யாண உற்சவம் ஆரம்பம்.
* கரூர் தான்தோன்றி கல்யாண வேங்கடேசப் பெருமாள் ஆடும் பல்லக்கில் பவனி.
* தேவகோட்டை மணிமுத்தா நதிக்கு அவ்வூர் சகல ஆலய மூர்த்திகளும் எழுந்தருளல்.
* சமநோக்கு நாள்.
19-ந்தேதி (சனி)
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் காலை வெள்ளி சப்பரத்திலும், இரவு கமல வாகனத்திலும் வீதி உலா.
* திருவரங்கம் நம்பெருமாள், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள். மதுரை கூடலழகர் தலங்களில் அலங்கார திருமஞ்சனம்.
* திருப்போரூர் முருகப் பெருமான் பால் அபிஷேகம்.
* கீழ்நோக்கு நாள்.
20-ந்தேதி (ஞாயிறு)
* சங்கடகர சதுர்த்தி.
* கார்த்திகை விரதம்.
* சங்கரன்கோவில் கோமதியம்மன். தூத்துக்குடி பாகம்பிரியாள் தலங்களில் திரு வீதி உலா.
* திருப்பரங்குன்றம் ஆண்டவர் தங்கமயில் வாகனத்தில் பவனி.
* கீழ்நோக்கு நாள்.
21-ந்தேதி (திங்கள்)
* முகூர்த்த நாள்.
* திருநெல்வேலி காந்திமதி அம்மன் ரிஷப வாகனத்தில் பவனி.
* மன்னார்குடி ராஜகோபால சுவாமி புறப்பாடு.
* மேல்நோக்கு நாள்.