< Back
சிறப்பு பேட்டி
வாடகை மனைவியாக்க முயன்ற பெரிய தொழிலதிபர்; பிரபல நடிகை பரபரப்பு தகவல்
சிறப்பு பேட்டி

வாடகை மனைவியாக்க முயன்ற பெரிய தொழிலதிபர்; பிரபல நடிகை பரபரப்பு தகவல்

தினத்தந்தி
|
14 July 2022 9:41 PM IST

பெரிய தொழிலதிபர் ஒருவர் மாதம் ரூ.25 லட்சம் சம்பளத்திற்கு மனைவியாக இருக்க வரும்படி அழைத்த வேதனையை பிரபல நடிகை வெளிப்படுத்தி உள்ளார்.



மும்பை,



விஷ்ணு என்ற தெலுங்கு படத்தில் நடித்து திரையுலகில் பயணிக்க தொடங்கியவர் நடிகை நீது சந்திரா. இதன்பின்னர், தமிழில் மாதவன் நடித்த யாவரும் நலம் படம் மூலம் ரசிகர்களிடையே அறிமுகம் பெற்றார். ஜெயம் ரவியின் ஆதி பகவன், விஷாலின் தீராத விளையாட்டு பிள்ளை உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

அதன்பின்னர் படத்தில் நடிக்க வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், சிங்கம் 3, சேட்டை, திலகர் ஆகிய தமிழ் படங்களில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியிருக்கிறார். தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார்.

அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் வருத்தமுடன் பேசியுள்ளார். அவர் பேசும்போது, தேசிய விருது வென்ற 13 பேருடன் மற்றும் பெரிய படங்களில் பணிபுரிந்து இருக்கிறேன். ஆனால், இன்று நான் ஒன்றும் இல்லை. என்னுடைய கதை ஒரு வெற்றி பெற்ற நடிகையின் தோல்வியடைந்த கதை என வருத்தமுடன் கூறியுள்ளார்.

ஒரு பெரிய தொழிலதிபர் என்னிடம் வந்து, மாதம் ரூ.25 லட்சம் தருகிறேன். நான் அவருக்கு சம்பளத்திற்கு மனைவியாக இருக்க வேண்டும் என கேட்டு கொண்டார் என்று நினைவுகூர்கிறார் நீத்து சந்திரா.




ஒரு பிரபல இயக்குனர், அவருடைய பெயரை வெளியிட நான் விரும்பவில்லை. ஆடிசனுக்கு என்னை கூப்பிட்டு விட்டு ஒரு மணிநேரத்தில் நிராகரித்து விட்டார். என்னை நிராகரிப்பதற்காகவே அவர் ஆடிசனுக்கு அழைத்து உள்ளார். அதனால், எனது நம்பிக்கை உடைந்து போகட்டும் என்ற நோக்கில் அவர் அப்படி செய்துள்ளார் என்று கூறியுள்ளார்.

நடிகை நீத்து சந்திரா பாலிவுட்டில் 2005ம் ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளார். நடிகர்கள் அக்சய் குமார் மற்றும் ஜான் ஆபிரகாமுடன் கரம் மசாலா என்ற படத்தில் நடிக்க தொடங்கிய அவர், டிராபிக் சிக்னல், 13பி, ஓய் லக்கி! லக்கி ஓய்! மற்றும் ரான் உள்ளிட்ட படங்களிலும் நடித்துள்ளார்.

சம்பரான் டாக்கீஸ் என்ற பெயரில் சொந்த படதயாரிப்பு நிறுவனம் தொடங்கி தேஸ்வா மற்றும் மிதிலா மகான் ஆகிய இரு படங்களையும் தயாரித்து உள்ளார்.

அவரது படங்களில் ஓய் லக்கி! லக்கி ஓய்! மற்றும் மிதிலா மகான் தேசிய விருது வென்றுள்ளன. 2021ம் ஆண்டில், நெவர் பேக் டவுன்: ரிவால்ட் என்ற படத்தின் வழியே ஹாலிவுட்டிலும் அவர் தடம் பதித்துள்ளார்.

மேலும் செய்திகள்