< Back
விமர்சனம்
விமானம்: சினிமா விமர்சனம்
விமர்சனம்

விமானம்: சினிமா விமர்சனம்

தினத்தந்தி
|
13 Jun 2023 5:24 PM IST
நடிகர்: சமுத்திரக்கனி, மாஸ்டர் துருவன் நடிகை: மீரா ஜாஸ்மின்  டைரக்ஷன்: சிவபிரசாத் யனலா இசை: சரண் ராஜ் ஒளிப்பதிவு : விவேக்கலேபு

கழிப்பறையை சுத்தம் செய்யும் மாற்றுத்திறனாளி சமுத்திரக்கனி. இவரது ஒரே மகன் மாஸ்டர் துருவனுக்கு விமானத்தில் பறக்க வேண்டும் என்று ஆசை. கழிப்பறை சொற்ப வருமானத்தில் வாழ்க்கையை நகர்த்தும் சமுத்திரக்கனிக்கு மகனின் ஆசையை நிறைவேற்ற முடியவில்லை.

ஒரு நாள் பள்ளியில் மயங்கி விழும் மகனை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு ஓடுகிறார். அங்கு சிறுவனுக்கு புற்றுநோய் பாதிப்பு உள்ளது என்றும் சில நாட்களில் இறந்து விடுவான் என்றும் மருத்துவர் அதிர்ச்சி தகவல் சொல்ல உடைந்து போகிறார் சமுத்திரக்கனி. விமானத்தில் பறக்க வேண்டும் என்ற மகனின் கடைசி ஆசையை நிறைவேற்ற துடிக்கிறார்.

அப்போது அவருக்கு ஒரே வருமானமாய் இருந்த கழிப்பறையை அதிகாரிகள் இடித்து விடுகின்றனர். மகனை விமானத்தில் ஏற்ற பணம் திரட்ட போராடுகிறார் சமுத்திரக்கனி.. அது நிறைவேறியதா என்பது கிளைமாகஸ்.

பாசமுள்ள மாற்றுத்திறனாளி தந்தையாக வாழ்ந்து இருக்கிறார் சமுத்திரக்கனி. மகனுக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பதை சொல்லி அழும்போது பார்ப்போரின் விழிகளில் நீர்முட்ட வைக்கிறார்.

ஆட்டோ டிரைவராக வரும் தன்ராஜ், செருப்பு தைப்பவராக வரும் ராகுல் ராமகிருஷ்ணா, சிறுவன் துருவன் ஆகியோர் இயல்பான நடிப்பை வழங்கி உள்ளனர். மீரா ஜாஸ்மின் சில காட்சிகளில் வந்தாலும் அம்சம்.

குழந்தைகள் படத்தில் விலைமாது கிளுகிளு காட்சிகளை தவிர்த்து இருக்கலாம்.

ஆரம்ப காட்சிகள் நாடகத்தனமாய் நகர்கின்றன. பிற்பகுதியில் அப்பா மகன் உறவை உணர்வுப்பூர்வமாக நகர்த்தி மனதை உருக வைத்துள்ளார் இயக்குனர் சிவபிரசாத் யனலா.

சரண் ராஜின் பின்னணி இசை விவேக்கலேபுவின் ஒளிப்பதிவு பலம் சேர்த்துள்ளன.

மேலும் செய்திகள்