வில் வித்தை: சினிமா விமர்சனம்
|நகரில் தொடர் கொலைகள் நடக்கிறது. கொலையாளிகளை பிடிக்க போலீஸ் களம் இறங்குகிறது.
இன்னொரு புறம் கால் டாக்ஸி டிரைவராக இருக்கும் நாயகன் அருண் மைக்கேல் மனைவிக்கு பிரசவ வலி ஏற்பட ஆஸ்பத்திரியில் சேர்க்கிறார்.
தாயையும் குழந்தையையும் காப்பாற்ற வேண்டுமானால் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர்.
நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பணம் கேட்டு அலையும் போது ஒரு பிரச்சினையில் சிக்குகிறார். அதை எப்படி கையாண்டார்? பிரச்சினையில் இருந்து மீண்டு வந்தாரா? என்பது கிளைமாக்ஸ்.
நாயகன் அருண் மைக்கேலுக்கு நடிப்பு திறமையை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரம். அதை நன்றாக பயன்படுத்தி ஸ்கோர் செய்திருக்கிறார்.
ஆரம்பத்தில் சாந்தமாக வந்து பாலியல் குற்றவாளிகளை நெருங்கும் போது இன்னொரு முகம் காட்டுகிறார்.
நாயகி ஆராத்யா குடும்ப பாங்கான தோற்றத்தில் கவர்கிறார். காவல்துறை அதிகாரியாக வரும் கெழுவை சுரேஷ்குமார் கதாபாத்திரத்தில் நேர்த்தி.
அம்மாவா நடித்திருக்கும் ஜானகி சோக காட்சிகளில் உருக வைக்கிறார். வில்லனாக குணா மிரட்டுகிறார்.
சிவக்குமார் கேமரா நள்ளிரவு காட்சிகளை அற்புதமாக படமாக்கி உள்ளது. அலிமிர்ஸாக் பின்னணி இசை கூடுதல் பலம்.
திரைக்கதையில் சில இடங்களில் தொய்வு இருப்பது பலகீனம்
சமூக அக்கறை கொண்ட படமாக எடுக்க முயற்சித்துள்ளார் டைரக்டர் ஹரி உத்ரா. பெண்கள் சமுதாயத்தில் மேம்பட்டு இருந்தாலும் சில இடங்களில் துன்புறுத்தலுக்கு ஆளாகிறார்கள் என்பதை அழுத்தமான திரைக்கதையில் சொல்லி உள்ளார்.